Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?

டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2021, 10:32 AM IST
Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி? title=

பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா 2.0 (Pradhan Mantri Ujjwala Yojana - PMUY) திட்டத்தை, உத்தரபிரதேசத்தில் உள்ள மஹோபாவில்,  செவ்வாய்க்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடக்கி வைத்தார்.

2016 ஆன் ஆண்டு தொடங்கப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டத்தில் (Ujjwala Yojana) , ​​வறுமைக் கோட்டுக்குக் கீழ் (Below Poverty Line) குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் ஏப்ரல் 2018 ஆண்டில் மேலும் ஏழு பிரிவுகளை (SC/ST, PMAY, AAY, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலைத் தோட்டம், காடு மற்றும் தீவு பகுதியில் வசிப்பவர்கள்)  சேர்ந்த பெண் பயனாளிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.

ALSO READ | Free LPG இணைப்பு பெறுபவர்களின் கவனத்திற்கு! அரசாங்கம் புதிய முடிவா?

2021-22 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி LPG இணைப்புக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு கோடி கூடுதல் PMUY இணைப்புகள் (உஜ்வாலா 2.0 இன் கீழ்)  வழங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டத்தில் சேர்க்கப்படாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, டெபாஸிட் இல்லாமல் LPG இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும். மேலும், இந்த திட்டத்தில் பதிவு செய்ய குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படும். உஜ்வாலா 2.0 திட்டத்தில் பலம் பெயர் தொழிலாளர்கள்  ரேஷன் கார்டுகள் அல்லது முகவரி சான்றை சமர்ப்பிக்க தேவையில்லை. 'குடும்ப உறுதின் ஆவணம்' மற்றும் 'முகவரி சான்று' ஆகிய இரண்டிற்கும் ஒரு சுய வாக்குமூலமே போதுமானது.

உஜ்வாலா 2.0 திட்டத்தின் பலன்கள்
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

உஜ்வாலா 2.0 திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
* விண்ணப்பதாரர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்
* பெண்ணிற்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
* பெண்ணின் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ்  இருக்க வேண்டும்
*  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான ஆவணம் கட்டாயம் தேவை
* இந்த திட்டத்தில் விண்ணப்பதாரரின் எந்த குடும்பனரின் பெயரிலும் எல்பிஜி இணைப்பு இருக்கக்கூடாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் முறையில் விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளம் pmujjwalayojana.com க்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள எல்பிஜி மையத்தில் இந்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அருகிலுள்ள எல்பிஜி விநியோக நிறுவனத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ | Free Cooking Gas: இலவச சமையல் எரிவாயு இணைப்பு அறிய வாய்ப்பு! முந்துங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News