இந்தியாவில் குளிர்பானங்கள் சில மாநிலங்களில் விற்பனைக்கு உள்ள சிக்கல்களால் விரைவில் பேக் செய்யப்பட்ட தேங்காய் தண்ணீர் பாணங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கோகோ கோலா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் 2013-ம் ஆண்டு ஜிக்கோ என்னும் பெயரில் தேங்காய் தண்ணீரை விற்கும் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பை இந்தியாவில் சோதனை முயற்சியாகக் கோகோ கோலா நிறுவனம் விற்பனைக்காக அறிமுகப்படுத்த இருக்கின்றது. 


2013-ம் ஆண்டு இந்தப் பாணங்களை அறிமுகப்படுத்திய ஜிக்கோ நிறுவனத்திற்குச் சந்தையில் நல்ல வேரவேற்பு கிடைத்து டாப் சிறந்த நிறுவனங்கள் பட்டியலுக்கு முன்னேறியது. ஜிக்கோ இப்போது கோகோ கோலா நிறுவனம் ஜிக்கோ நிறுவனத்தின் தேங்காய் தண்ணீர் தயாரிப்பை இந்தியாவில் சோதனை முயற்சியில் விற்பதற்காக தகவல் வந்துள்ளது. 


இந்தியாவில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்கள் நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில வணிகர் சங்கங்கள் வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர். 


ஏ1 பால் தேங்காய் தண்ணீர் போன்றே கோகோ கோலா நிறுவனம் ஏ1 குளிரூட்டப்பட்ட பால் விற்பனையிலும் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் பேக் செய்யப்பட்டு இளநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கோகோ கோலா நிறுவனத்தைப் போன்று ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் இளநீர்களைப் பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.