உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணத்தையும், அதன் முக்கிய மசூதியை காண்பதற்கான கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்படி தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணம் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தாஜ்மகாலின் முக்கிய மசூதியை காண 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். 


தற்போது முக்கிய மசூதியை காண்பதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. தாஜ்மகாலை பாதுகாப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 50 ருபாய்க்கு வழங்கப்படும் டிக்கெட்டுகள் 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிலையம் நடத்தப்பட்ட ஆய்வில் தாஜ்மகாலின் முக்கிய மசூதிக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.