திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், அங்கு வார இறுதி நாட்களில் அதாவது சனி (ஜூலை 17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முழுமையான ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடுவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று கேரளாவில் (Kerala) 14,539 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைகளின் நேர்மறை விகிதம் 10.46 சதவீதமாக இருந்தது.


"ஜூன் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் முழுமையான ஊரடங்கு இருக்கும். இந்த நாட்களில் ஜூலை 12 மற்றும் 13 ஆம் தேதிக்கு வழங்கப்பட்ட அதே வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்” என்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


"வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மூடப்பட்டிருக்கும். ஏ, பி மற்றும் சி பிரிவில் உள்ள கடைகள் முன்பு அனுமதிக்கப்பட்ட நாட்களில் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.


ஏழு நாள் சராசரி சோதனை நேர்மறை விகிதத்தின் (TPR) அடிப்படையில் உள்ளூர் சுய-அரசு நிறுவனங்களின் (LSGIs) தற்போதைய வகைப்படுத்தல் தொடரும் என்று அரசாங்கம் மேலும் கூறியது.


கடந்த ஏழு நாட்களாக சராசரி டிபிஆரின் அடிப்படையில் எல்.எஸ்.ஜி அமைப்புகள் சமீபத்தில் மறுவகைப்படுத்தப்பட்டன.


அதன்படி, ஏ பிரிவில் 165 உள்ளாட்சி அமைப்புகள் (டிபிஆர் 6 சதவீதத்திற்கும் குறைவாக), பி பிரிவில் 473 (6 -12 சதவீதம் டிபிஆர்), சி பிரிவில் 316 (12-18 சதவீதம் டிபிஆர்) மற்றும் 80 டி வகை (டிபிஆர் 18 சதவீதத்திற்கு மேல்) உள்ளன.


இதற்கான வகைப்பாடு பின்வருமாறு: 


'ஏ' பிரிவில் (டிபிஆர் வீதம் 5 சதவீதம் வரை உள்ள பிரிவு), ஊரடங்கு (Lockdown) உள்ள வார இறுதி நாட்கள் தவிர அனைத்து வகையான கடைகளும் வணிக நிறுவனங்களும் மற்ற அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்.


ALSO READ: இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று


டிபிஆர் 10 சதவீதம் வரை உள்ள 'பி' பிரிவில், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். மற்ற அத்தியாவசியமற்ற பொருட்களின் கடைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி வரை செயல்படும்.


டிபிஆர் வீதம் 15 சதவீதம் வரை உள்ள 'சி' பிரிவில், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். மற்ற கடைகள் வெள்ளிக்கிழமை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன.


'டி' பிரிவில் (டிபிஆர் வீதம் 15 சதவீதத்திற்கு மேல்), அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன.


'ஏ', 'பி' மற்றும் 'சி' எல்.எஸ்.ஜி.ஐ.களில் உள்ள கடைகள் இரவு 8 மணி வரை செயல்படலாம். வங்கிகள் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஜூலை 17 வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு விடுமுறையாக இருக்கும்.


கேரள கோவிட் -19 நிலவரம்


செவ்வாயன்று கேரளாவில் 14,539 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர், 124 பேர் இறந்தனர். கேரளாவில் மொத்த தொற்று எண்ணிக்கை 30,87,673 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 14,810 ஆகவும் உள்ளது. மலப்புரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் (2,115) பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் 1,624 பேர் மற்றும் கொல்லத்தில் 1,404 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


ALSO READ: ஒரு வாரத்துக்குப் பின் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR