உணவு கழிவு கொண்டு இயற்கை எரிசக்தி உண்டாக்கும் திட்டம் -கட்கரி!
புதைபடிவ எரிபொருட்களை, மாற்று எரிசக்தி ஆதாரங்களுடன் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்களன்று பேருந்துகள், உணவு கழிவுகளை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மீது விரைவில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பின்னர் வழக்கமாக எரிக்கப்படும் கழிவுகளை இயற்கை எரிவாயுவாக மாற்றும் பணி ஏற்கனவே லூதியானாவில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டிறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுக் கழிவுகளை பயோ-இயற்கை எரிவாயுவாக மாற்றும் செயல்முறை அடுத்த இரண்டு மாதங்களில் மகாராஷ்டிராவில் தொடங்கப்படும். மெத்தனால் மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவற்றைப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவாக பேருந்துகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் (எம்.எஸ்.எம்.இ) பொறுப்பாளரான கட்கரி, லூதியானாவில் உள்ள ஆலைக்கு நிதியளிக்க அமைச்சகம் பச்சைக் கொடியை வழங்கியுள்ளது, அங்கு கழிவுகள் - இயற்கை இயற்கை எரிவாயுவாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் எரிசக்தி திறன் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய நிதின் கட்கரி, ஒரு தயாரிப்பு மீது ஐ.எஸ்.ஐ குறி நிர்ணயிப்பதற்கான விதிகள் விரைவில் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை விட அதிகமாக மின்சாரம் நுகரும் எந்தவொரு தயாரிப்புக்கும் ISI அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாற்று எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள கட்கரி வாதிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, மின்சார இயக்கத்திற்கான மாற்றம் வரவிருக்கும் காலங்களில் அதன் இயல்பான முன்னேற்றத்தில் வரும் என்று அவர் கூறியிருந்தார். அரசாங்கத்தின் பங்கு குறித்து, "மின்சார (வாகனங்கள்) கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை, அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை கூட தடை செய்ய வேண்டிய அவசியமில்லை" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.