BJP-க்கு எதிராக திரும்பிய காவி; காங்., கட்சிக்கு கம்ப்யூட்டர் பாபா பூஜை!!
போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திக் விஜய் சிங்கிற்காக, கம்ப்யூட்டர் பாபா சிறப்பு பூஜை நடத்தினார்!!
போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திக் விஜய் சிங்கிற்காக, கம்ப்யூட்டர் பாபா சிறப்பு பூஜை நடத்தினார்!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங்கிற்கு, ஆயிரக்கணக்கான இந்து சாமியார்களே கடும் எதிர்ப்பை தெரிவித்து களமிறங்கியுள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச தலைநகர் போபால் லோக்சபா தொகுதி தற்போது VIP அந்தஸ்து பெற்றுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அந்த தொகுதியில் களமிறங்கியுள்ள நிலையில், BJP சார்பில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை எதிர்த்து, திக் விஜய் சிங் களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக கம்ப்யூட்டர் பாபா என்ற சாமியார், 100-க்கும் மேற்பட்ட சாதுக்களை வரவழைத்து, திக் விஜய் சிங்கிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளார். பிரச்சாரத்திற்கு முன்னதாக இன்று சிறப்பு பூஜை ஒன்றை அவர் நடத்தினார். அதில் திக் விஜய் சிங்கும் கலந்து கொண்டார்.
இதையடுத்து, கம்ப்யூட்டர் பாபா கூறுகையில், நர்மதாவின் நிஜமான பக்தர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் தான் என்று அழுத்தமாக தெரிவிக்கிறார். நானும் சரி, பிற சாமியார்களும் சரி, நர்மதாவுக்கு பூஜை செய்வோமே தவிர, ஜெயில் யாத்திரை நடத்துவது கிடையாது. பிரக்யா சிங், ஒரு சாமியார் என்று அழைக்க தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர். வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே குறித்து, மோசமான கருத்து தெரிவித்தவராகும்.