பாராட்டுக்கள்!! ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்த வாலிபர்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்த வாலிபர். இந்த தம்பதியருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
கடந்த 2012 வருடம் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலிதா(வயது 26) மீது தனிப்பட்ட விரோதம் காரணமாக அவரது உறவினர் ஆசிட் வீசினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு 17 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த மாலாத் பகுதியில் வசிக்கும் ராகுல்(27) என்பவர் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறுதலாக லலிதாவை மொபைலில் அழைத்துள்ளார். தொடர்ந்து இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து காதலாக மாறியது. இரண்டு மாதங்களு்கு பின்நேரில் சந்தித்து பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். இதன்படி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் குறித்து லலிதா கூறியதாவது: தற்போது நான் மிகழ்ச்சியாக உள்ளேன். எனக்கு திருமணம் நடக்கும் என நான் நினைத்து பார்க்கவே இல்லை. உண்மை தெரிந்த பின்னரும், என்னை திருமணம் செய்வதில் ராகுல் உறுதியாக இருந்தார்.
திருமணம் குறித்து ராகுல் கூறியதாவது: லலிதாவின் மனம் உண்மையானது. அது தான் முக்கியம். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என எப்போதும் எண்ணுவேன். என்னால் நல்லது செய்ய முடியும் எனவும் நம்பியதுண்டு. லலிதாவை திருமணம் செய்வதை எனது தாயார் மற்றும் குடும்பத்தினரும் ஆதரவு அளித்தனர்.
நடிகர் விவேக் ஒபராயின் பரிசு:
நடிகர் விவேக் ஓபராய், லலிதாவுக்கு தானே நகரில் குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை பரிசாக அளித்துள்ளார். ஆடை ஆலங்கார நிபுணர் அபு ஜானி மற்றும் ஜந்தீப் கோஸ்லா, நெக்லஸ் மற்றும் திருமணத்திற்கு லலிதா ஆடை அலங்காரத்தை செய்துள்ளனர்.