மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக ஆகலாம். உத்தவை முதலமைச்சராக்க காங்கிரசும் என்சிபியும் ஒப்புக் கொண்டுள்ளதாக என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்தார். மாநிலத்தில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு முடிந்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்ற கொள்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றார். இருப்பினும், ஆலோசனை கூட்டத்திலிருந்து வெளியே வந்த உத்தவ், அதைப் பற்றி எதுவும் கூற மறுத்துவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுற்று இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சராக பதவி ஏற்பது குறித்து இன்னும் நான் ஒப்புக் கொள்ளவில்லை சிவசேனா தலைவர் கூறியுள்ளார்.


உத்தவ் மற்றும் ஷரத் பவாரின் கூற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், முதலமைச்சரின் நாற்காலி தொடர்பாக இந்த விவகாரம் மூன்று கட்சிகளுக்கிடையில் சிக்கியுள்ளது என்பது தெளிவாகிறது. சிவசேனாவின் 56 எம்.எல்.ஏக்கள், என்.சி.பி.யின் 54 மற்றும் காங்கிரசில் 44 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவசேனா கட்சியின் இளைஞர் தலைவர் ஆதித்யா தாக்கரே பெயர் முதலமைச்சரின் பட்டியலில் சேர்க்கப்படாததால், சுபாஷ் தேசாய் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் பெயர்களை கட்சி இப்போது முன்மொழிந்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) அவர்களை நிராகரித்து உள்ளதாகவும், அதேவேலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தான் முதலமைச்சர் பதவியை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


நமக்கு கிடைத்த தகவலின் படி, முதலமைச்சர் பதவியை தவிர அமைச்சரவையில் சிவசேனாவின் 15 அமைச்சர்களும், என்.சி.பி.யின் 15 பேரும், காங்கிரசில் 12 பேரும் இருப்பார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.


சட்டமன்ற சபாநாயகர் பதவியை விட்டு தருவதில் என்.சி.பி விரும்பவில்லை. ஆனால் இந்த பதவியை காங்கிரஸ், அதன் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவனுக்கு அளிக்க விரும்புகிறது.