ராஃபெல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு தவிர்த்து விட்டது என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ராஃபெல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் கூறினார்.


இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ராஃபெல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.


ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு மற்றும் விலை பேச்சுவார்த்தை குழு ஆகியவை ஏன் இருளில் மறைக்கப்பட்டன? பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை குழுவும் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்து கொள்ளப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.



காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ராஃபெல் போர் விமானம் ஒன்றை ₹.526 கோடி அளவில் வாங்கியது. பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு ராஃபெல் போர் விமானம் ஒன்றை ₹.1,670 கோடி அளவில் வாங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை சரியெனில், விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.