கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரபேல் ஆவணங்கள் உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடைப்பெற்ற போது முதல்வர் மனோகர் பாரிக்கர்  “ ரபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த அனைத்து ஆவணங்களும் தன்வீட்டுப் படுக்கை அறையில் இருக்கிறது” என்று தெரிவித்ததாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசிய ஆடியோ வெளியானது.


இந்த ஆடியோவை காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் வெளியிட்டார். 
ஆனால் இந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது, காங்கிரசின் வேலை இது என்று பாஜக சாடியுள்ளது.


இந்நிலையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பிரதமர் மோடியை மிரட்டுகிறார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இந்த ஆடியோ டேப்கள் போல் இன்னும் பல டேப்கள் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும்., ரபேல் ஒப்பந்தத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ஏன் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.


மேலும் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதம் மோடி தனது நான்கு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், ராகுல் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளை பதிவிட்டுள்ளார்.



ரபேல் தொடர்பாக மோடிக்கு, ராகுலின் நான்கு கேள்விகள்...


  • 126  IAF போர் விமானங்களுக்கு பதிலாக ஏன் 36 விமானங்கள் வாங்கப்படுகின்றன?

  • ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் தொகை ₹526 கோடியிலிருந்து ₹1600 கோடியாக அதிகரித்தது எப்படி?

  • கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரபேல் ஆவணங்கள் வைக்க காரணம் என்ன?

  • HAL விமானங்களுக்கு பதிலாக AA விமானங்கள் பெற காரணம் என்ன?


என குறிப்பிட்டுள்ள அவர், இந்த கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.