காவலாளி மோடி இல்லை, அவர் களவானி மோடி - ராகுல் தாக்கு!
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி களவானி மோடி என குறிப்பிட்டு பேசினார்!
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி களவானி மோடி என குறிப்பிட்டு பேசினார்!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடகா மாவட்டம் கோலாரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார கூட்டத்தில் தனது உரைக்கு இடையே ரபேல் ஊழல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ராகுல், ‘இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100% திருடன்’ என்று குற்றம்சாட்டினார்.
30,000 கோடி ரூபாயை திருடி தனது திருட்டு நண்பன் அனில் அம்பானிக்கு அவர் கொடுத்து விட்டார் என தெரிவித்த அவர், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒரு திருட்டுக் கூட்டமே உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? இன்னும் இதைப்போல் எத்தனை மோடி வரப்போகிறார்களோ நமக்கு தெரியாது’ என தெரிவித்தார்.
28 மக்களவை தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மத்திய மற்றும் தெற்கு கர்நாடகாவை சேர்ந்த 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதியும், வடக்கு பகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படுகிறது. பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 23-ஆம் ஆறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக-வை தொகுதிகள் பொருத்தவரையில் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் மாண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்ரீஷின் மனைவி சுமலதா அம்ரீஷ் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்து வருகிறது.
காங்கிரஸ் - ஜனதா தல கூட்டணியில் தொகுதி பங்கீடு 21:7 என்ற விகிதாச்சாரத்தில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.