ராகுல் காந்தி அவர்களின் திருமணத்தை பற்றி நீண்ட காலமாக பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராகுல் காந்தி இரு நாள் பயணமாக ஹைதராபாத் சென்றுள்ளார். அப்பொழுது அவரிடம் போது, திருமண திட்டங்களை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, ஏற்கனவே எனக்கு திருமணம் ஆகி விட்டது. காங்கிரஸ் கட்சியை நான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 2019 இல் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடாது என்று கூறினார். பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) 230 இடங்களை வரை வெற்றி முடியாது என அவர்களுக்கு தெரிந்துள்ளது எனக் கூறினார். மேலும் அவரிடம் பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் உட்பட ஒரு அணி உருவாகும் போது, அந்த அணிக்கு யார் பிரதமாராக இருப்பார் என கேள்வி எழுப்பட்டது. இது பற்றி பிறகு முடிவு செய்யப்படும். எங்கள் சிந்தனையுடன் ஒத்துபோகும் மாநிலக் கட்சிகள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் ராகுல் கூறினார். அதே நேரத்தில், காங்கிரஸ் தெலுங்கானாவில் அதிகாரத்தில் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 


ஆந்திராவைப் பற்றி கேட்டபோது, 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பெருசா எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி இங்கே தனது நிலையை மேம்படுத்ததி வருவதாக கூறினார்.


நாட்டில் சகிப்புத்தன்மையை எதிராக பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் எனவும் கூறினார்.