துயரமான இந்த வேளையில், மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு தரும்: ராகுல் காந்தி
அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் உறுதுணையாக நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!
அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் உறுதுணையாக நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 CRPF வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே பயங்கரவாதிக்கள் வெடிகுண்டு ஏந்திய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் பயணித்த கான்வாயில் புகுந்தது மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் 39 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தில் 44 பாதுகாப்புபடையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் உறுதுணையாக நிற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த துயரமான வேளையில், மத்திய அரசுக்கு தனது முழுஆதரவை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, எந்த சக்தியாலும் இந்த நாட்டை பிரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் அருவருக்கத்தக்க முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறியுள்ள ராகுல்காந்தி, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த சக்தியாலும் இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினர் பக்கம் மக்கள் இருப்பதை, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உணர்த்த வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தீவிரவாத சக்திகளுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.