தெலங்கானாவில் வெற்றி பெறுவதற்கு ஆசிர்வதிக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கென கூட்டணி அமைத்துள்ளன. 


ஆனால் கூட்டணி ஏதும் இன்றி பாஜக மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 3 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில், நிஜாமாபாத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தியாகத்தால் உருவானது தெலுங்கானா இந்த மாநிலம் வளர்ச்சி அடைய BJP-க்கு ஓட்டளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 


இதை தொடர்ந்து அவர் மேலும் பேசுகையில், தெலுங்கானாவில் காங்கிரஸ்சும், முதல்வர் சந்திரசேகர ராவ் வளர்ச்சி பணிக்கு எதுவும் செய்யவில்லை. ராவ் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ராவ் பணக்காரர்களுக்கு உதவி செய்கிறார். காங்கிரஸ் வழியையே முதல்வர் பின்பற்றுகிறார். 



இங்கு தெலுங்கானா வளர்ச்சி பணிக்கு BJP ஆட்சிக்கு வரவேண்டும். இங்குள்ள விவசாயிகள் அனைவரும் BJP மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எங்களின் அரசு 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு செய்யும் திட்டத்தை துவக்கியுள்ளோம். ஆயூஸ்மான் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழைகள் பயனடைந்து வருகின்றனர். மாநில வளர்ச்சிக்கு எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என பிரதமர் நிஜாமாபாத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.