கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத 17 எம்.எல்.ஏ.க்களை, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். 


மேலும், 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட இவர்களுக்குத் தடைவிதித்தும் அவர் உத்தரவிட்டார். 17 பேர் தகுதி நீக்கத்தால் கர்நாடக சட்டப்பேரவை பலம் 208 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 105 உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி 14  எம்.எல்.ஏக்கலும் சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 


இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேர், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.