புதுச்சேரி, அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக காங்கிரசில், காமராஜ் நகர் தொகுதியில் இருந்து ஜான் குமாரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் அரசின் வேட்பாளர் ஜான் குமாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 


இதனுடன், அசாமின் நான்கு மக்களவைத் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


அசாமில் உள்ள ரத்தன்பாடி (தனி) இடத்திலிருந்து கேஷன் ராஜக்கை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது, ஜானியாவைச் சேர்ந்த சம்சுல் ஹோக், ரங்கபாராவைச் சேர்ந்த கார்த்திக் குர்மி, சோனாரியைச் சேர்ந்த சுஷில் சூரி ஆகியோரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 


அசாமில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடியுரிமை பட்டியல் (NRC), அம்மாநிலத்தில் பதற்றமான சூழலை உண்டாக்கியுள்ளது. அதே நேரத்தில், சத்தீஸ்கரில் உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்காக, சித்ரகோட்டிலிருந்து ராம்மான் பென்சாமுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, நான்கு மாநில சட்டமன்றத் தொகுதிகளில் நடைப்பெற்ற சட்டசபை இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தை மட்டுமே வென்றது. பாஜகவிடம் இருந்து தாந்தேவாடா இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் மூலம் பஸ்தார் பிராந்தியத்திலிருந்து பாஜக வெளியேறியது. எனினும் மற்ற இடங்களின் முடிவுகள் காங்கிரஸுக்கு பாதகமாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.