முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடாவின் ஜனதா தளம் (மதச்சார்பற்றது), இன்று ‘2019 மக்களவை தேர்தலுக்கான’ தொகுதி உடன்படியிக்கையினை காங்கிரசுடன் இறுதி செய்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) - காங்கிரஸ் கட்சிகள், எதிர்வரும் 2019-ஆம் மக்களவை தேர்தலை கூட்டாக எதிர்கொள்ளும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஜனதா தளம் 10 தொகுதிகள் பெறும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து ஜனதா தளம் 8 தொகுதியில் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்த உடன்படிக்கையின் படி., கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்ற டும்கூர் தொகுதியினை ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது. எனினும் கடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற மற்ற தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன்வரவில்லை. அதேவேலையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சிதரமய்யாவின் சொந்த மாவட்டமான மைசூரு தொகுதியினையும் விட்டுக்கொடுக்க வில்லை.


கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி. (எஸ்) கூட்டணி அதிகாரத்தில் உள்ளது எனினும் இந்த இரு கட்சிகளுக்கு இடையே அடிக்கடி கிளர்ச்சி, சச்சரவுகள் வந்து சென்றுக்கொண்டு தான் இருக்கின்றது. சமீபத்தில் கூட்டணி ஆட்சி கலைந்து ஆட்சி மாற்றம் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்து கேள்விகுறி இருந்து வந்தது. இதற்கிடையில் சமீபத்தில் கடந்த வாரம், தேவே கவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து, தொகுதிகள் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். 


இந்த பேச்சுவார்த்தையில் ஜனதா தளத்திற்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 8 தொகுதிகள் மட்டுமே ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு தெற்கு மைசூரில் வைத்து முடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.