டொனால்ட் டிரம்ப் ஒன்னும் கடவுள் அல்ல, அவரை வரவேற்க 70 லட்சம் மக்கள் நிற்க: காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரி
அவரை வரவேற்க 70 லட்சம் மக்களை வரிசையில் நிற்க வைக்க `டிரம்ப் என்ன கடவுள் ராமரா? என கேள்வியை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
புது டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) இந்திய பயணத்திற்கு முன்னதாகவெ அரசியல் ஆரம்பமாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் வருகைக்காக 70 லட்சம் இந்தியர்கள் வரிசையில் நிற்க வைப்பதா எனக்கூறி காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. அவரை வரவேற்க 70 லட்சம் மக்களை வரிசையில் நிற்க வைக்க "டிரம்ப் என்ன கடவுள் ராமரா? என்ற கேள்வியை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (Adhir Ranjan Chowdhury) எழுப்பியுள்ளார். டிரம்ப் தனது இந்திய பயணத்தின் போது, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை 70 லட்சம் பேர் என்னை வரவேற்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக, அவர் (டிரம்ப்) கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் என்ன கடவுள் ராமர்? ஆதிர் சவுத்ரி கேள்வி
மக்களவை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் ஆதீர், டிரம்பை வரவேற்க ஏன் பல இந்தியர்கள் கூட வேண்டும் என்று கேட்ட அவர், "டிரம்ப் என்ன கடவுள் ராமரா? அவர் வெறும் அமெரிக்காவின் அதிபர். அவருக்காக 70 லட்சம் மக்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன? அவரை வணங்க இந்திய மக்களாகிய நாங்கள் நிற்க மாட்டோம் என்றார்.
"டிரம்ப் தனது நலனுக்காக இந்தியா வருகிறார்"
டிரம்ப் தனது நலனுக்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்று ஆதீர் ரஞ்சன் கூறினார். இருநாடுகளுக்க்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசை தாக்கி பேசிய அவர், தனது பயணத்தின் போது டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டார். "டிரம்ப் வருகிறார், ஆனால் அவர் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை" என்று ஆதீர் கூறினார். அவர் அமெரிக்க தொழில்களுக்கான பாதுகாப்பைப் பாதுகாக்க விரும்புகிறார். அமெரிக்க சந்தையில் நமது நாட்டை விட அவர் விரும்பவில்லை என்பது தான் இதன பொருள். இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று அவர் கூறுவாரா? எனவும் கேள்வி எழுப்பினர்.
டிரம்ப் 24-25 அன்று இந்தியாவில் இருப்பார்:
அமெரிக்க ஜனாதிபதி பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் இருப்பார். இது குறித்த தகவல்களை அளித்து டிரம்ப், பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் என்று வர்ணித்தார். முதல் முறையாக இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்தும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதாவது தான் "பிரதமர் மோடியுடன் பேசினேன். என்னை வரவேற்க அகமதாபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்: என்று மோடி கூறியதாக கூறினார்.