CAAக்கு எதிர்ப்பு தெரிவிக்க PFI-யிலிருந்து பணம் பெற்ற கபில் சிபல்!
காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) யிடமிருந்து பணம் பெற்றதாக வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தெரிவித்தன.

இந்த நிதியை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், துஷ்யந்த் ஏ டேவ் மற்றும் அப்துல் சமந்த் ஆகியோர் பெற்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சிபல் 77 லட்சத்தையும், ஜெய்சிங் 4 லட்சத்தையும் பெற்றதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் துஷ்யந்த் ஏ டேவின் வங்கிக் கணக்கில் ரூ .11 லட்சமும், அப்துல் சமந்தின் வங்கிக் கணக்கில் ரூ .3.10 ரூபாயும் மாற்றப்பட்டன.
மொத்தம் 73 வங்கிக் கணக்குகளில் ரூ .120 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை பி.எஃப்.ஐ நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த சட்டத்திற்கு எதிராக மக்களைத் தூண்டுவதில் ஈடுபடும் எவரையும் மோடி அரசு விடாது என்றும் அவர் கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.