காந்தி குடும்பம் தான் இந்தியாவின் முதல் குடும்பம், இவர்களுக்கு இந்தியா கடமை பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் பி.சி. சக்கோ தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேரு குடும்பமே இந்தியாவின் "முதல் குடும்பம்" என்று நேரு குடும்பத்திற்கு நாடு கடமைப்பட்டிருப்பதாக தலைவர் பி.சி. சக்கோ கூறியுள்ளார். இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; இந்தியாவின் முதல் குடும்பமான நேரு குடும்பத்தின் மீது பிரதமர் மோடி எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். உண்மையிலேயே நேரு குடும்பம் தான், இந்தியாவின் முதல் குடும்பம். இந்தியா தான் அவர்களுக்கு முக்கியம். இந்தியா விண்வெளியில் செய்த சாகசம் பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் உண்மை என்வென்றால், இந்தியா இன்று இந்தியாவாக இருப்பதற்கு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு வகுத்த திட்டங்கள் தான் முக்கிய காரணம்.



பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வரலாறு பற்றி தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது என்ன நிலைமை இருந்தது? பசுமை புரட்சி, வெண்மை புரட்சியால் தான் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியது. முன்னாள் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் தான் அனைத்தும் நடந்தது. இந்தியாவிற்கு நேருவும், அவரது குடும்பமும் அளித்த பங்களிப்பை எவராலும் அழிக்க முடியாது. ராகுல் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆக போகிறார். இதனை மோடியும் பார்க்கத்தான் போகிறார் என்றார்.