பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கதம் நாக்கை யார் வேட்டுவார்களோ அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக சுபாத் சாவோஜி தெரிவித்துள்ளார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலம் பா.ஜ.க MLA-வான ராம் கதம் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, காதலிக்கும் பெண் காதலை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அந்த பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்க தான் உதவி செய்வதாகவும், அதற்காக தனது தொலைபேசி எண்ணையும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


இவர் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பா.ஜ.க MLA ராம் கதம் இதற்க்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மன்னிப்பு கேட்டாலும் இவருக்கு எதிராக மகளிர் அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைமையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி பா.ஜ.க எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குவேன். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 



ராம் கதமின் பேச்சிற்காக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.