காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி டெல்லியில் உள்ள ராம் மனோகர் ஹோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல் துறையினர் நடத்திய தாக்குதல் காரணமாக ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.


 



முன்னதாக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், “டெல்லி காவல்துறை மிக மோசமாக தாக்கி எனது ஆடையை கிழித்து வரம்பு மீறி கைது செய்து ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.


ஒரு மணி நேரமாக தாகம் என தண்ணீர் கேட்டு வரும் எங்களுக்கு தண்ணீர் கூட தர மறுக்கிறார்கள்.கடையில் கூட தண்ணீர் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை.



ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது யாருக்கும் நேரக்கூடாது. எனவே, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு நாடாளுமன்ற தலைவர் ஓம் பிர்லாவிடமும் புகார் அளித்திருந்தார்.


 



இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் ஜோதிமணியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து எந்த ஜனநாயக நாட்டிலும் இது வெறுக்கத்தக்கது. ஒரு பெண்ணை இப்படி கையாள்வது ஒழுக்கத்தை மீறுவதாகும். இதைனை வன்மையாக கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.


மேலும் படிக்க | அக்னிபாத் வன்முறைக்கு மத்திய அரசின் "தவறான கொள்கைகள்" தான் காரணம் -கேசிஆர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR