புதுடெல்லி: "ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார். இதற்கு முன், வெள்ளிக்கிழமை, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், குறிப்பாக மக்களவையிலும் ராகுல் காந்தியின் அறிக்கை குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தி கூறுகையில், "எனது தொலைபேசியில் நரேந்திர மோடியின் ஒரு கிளிப் உள்ளது, அதில் மோடி "டெல்லி ஒரு கற்பழிப்பு தலைநகரம்" என்று அழைத்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த வீடியோ-வை ட்வீட் செய்வேன். வடகிழக்ககு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டங்களை மறைக்கவே எனது அறிக்கை குறித்து பிரச்சினையை பாஜக எழுப்புகிறது எனவும் கூறினார்.


 



பாஜக எம்.பி.க்கள் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷங்களையும் எழுப்பினர், அதன் பின்னர் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பாஜக எம்.பி ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு தலைவர் தெளிவாகக் கூறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. ராகுல் காந்தியின் இந்த செய்தி நாட்டு மக்களுக்கா? எனக் கேள்வி எழுப்பினார்.


 



பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில், ராகுல் காந்தியின் அறிக்கை எனக்கு காயம் ஏற்படுத்தி உள்ளது, அது நாடு முழுவதும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார். அத்தகைய சொற்களைப் பயன்படுத்தும் ஒருவர் சபைக்கு வர முடியுமா? அவர்கள் இந்த சபைக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


 



ராஜ் சபையில் எம்.பி.க்கள் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறுகையில், இந்த சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பெயரை நீங்கள் கூறி கோசங்களை எழுப்ப முடியாது. சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை என பாஜக எம்.பி-க்களை எச்சரித்தார்.


ஜார்கண்டில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி, "மேக் இன் இந்தியா" என்று நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் இப்போது நீங்கள் எங்கு பார்த்தாலும் "மேக் இன் இந்தியா இல்லை", இப்போது இந்தியாவில் கற்பழிப்பு தான் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில், நரேந்திர மோடியின் எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறார். அதுக்குறித்து நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும், பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய பாஜக எம்.பி. முயற்சித்தார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் பிரதமர் பேசவே மாட்டார். தேசம் தனது மகள்களை "பாஜகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டும். தற்போது நாடு "ரேப் இன் இந்தியா"வாக மாறி வருகிறது என கடுமையாக பாஜக அரசை சாடினார்.


 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.