10, 12-ம் வகுப்பின் வரலாறு, அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து ஆப்பிரிக்க-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய அரசவைகளின் வரலாறு, தொழில்துறை புரட்சி ஆகியவற்றை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. மேலும், வேளாண் துறையில் உலகமயமாக்கலின் தாக்கம் என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு என்ற பிரிவில் ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் 2 கவிதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இடம்பெற்று இருந்தன. அந்த கவிதைகள் நீக்கப்பட்டுள்ளதோடு, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. என்சிஇஆர்டி பரிந்துரை பேரில் இந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து இந்த பாடங்கள் நீக்கப்படவுள்ளன. 


மேலும் படிக்க | ஓயாத NCERT சர்ச்சை; ரம்ஜான் அவர்கள் பண்டிகை; விநாயகர் சதுர்த்தி நம் பண்டிகை!


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சிபிஎஸ்இ(CBSE) கல்வியை முடக்குவதாகக் கூறி அதனை 'Central Board of Suppressing Education' என விமர்சித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பே இதற்குக் காரணமெனக் குறிப்பிட்டுள்ள அவர் அந்த அமைப்பு மாணவர்களின் கல்வியைத் துண்டாக்குவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், உலகம் அறிந்த இந்திய வரலாற்றை மதவெறி நோக்கத்தில் திரித்து எழுத, ஆட்சிப் பொறுப்பேற்ற தினத்தில் இருந்தே பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்துத்துவ கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்து சனாதன கோட்பாட்டை நிலை நிறுத்த, வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளி பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். ஹிட்லரும், முசோலினியும் இதே போன்றுதான் பள்ளிக்குழந்தைகளுக்கு மூளைச்சலவை செய்ய பாடத்தில் பாசிச கருத்துகளை திணித்ததாகவும், வரலாற்றுப் பாடங்களை நீக்கி, இந்துத்துவ கருத்துகளை திணிப்பதை பாஜக அரசு கைவிட வேண்டும் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.



மேலும் படிக்க | ஹிஜாப் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் பவசராஜ் பொம்மை வேண்டுகோள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR