மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதன் மூலம் வரலாற்றை மீண்டும் உருவாக்கியுள்ளார் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், 1970-ஆம் ஆண்டு இந்திராகாந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்திராவுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்து விட்டார், நிர்மலா சீதாராமன். இதற்காக எனது கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.


மேலும் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் தமிழ் சங்க இலக்கியமான புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டியது பாராட்டுதலுக்கு உரியது. அதேவேளையில் அவர், நிலம் புகுந்த யானை எனத் தொடங்கும் வரிகளை மேற்கோள் காட்டி, அவர்களது அரசு யானை போல் மெதுவாக செயல்படுகிறது என ஒப்புக் கொண்டுள்ளார். 


மேலும் பட்ஜெட்டில் பல குறைகளைத் தெரிவித்த அவர் ‘இந்த பட்ஜெட் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் ஒரு 'திரிசங்கு' பட்ஜெட்டாக உள்ளது,' என விமர்சித்தார். மேலும் அதற்காக நிர்மலா சீதாராமனை மட்டுமே குறை கூறி விட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சுதந்திர இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 5-ஆம் நாள் தனது முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜட் விவாசய நலன், சமானிய மக்களின் வளர்ச்சி, கல்வி, ஆராய்ச்சி, வரி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாகவும், இது இந்தியாவிற்கான பட்ஜெட் என்றும் மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் மத்திய அரசின் இந்த பட்ஜட் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் இரண்டாம் கட்ட பட்ஜட்டாக இருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது நிர்மலா சீதாராமனின் பட்ஜட் திரிசங்கு பட்ஜட் போல் இருப்பதாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.