மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான நவோஜத் சிங் சித்து மீது காங்கிரஸ் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமேர்ந்திர சிங் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சித்து மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தேர்தல் எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் சித்துவின் விமர்சனம் குறித்து விளக்கம் கேட்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக நேற்றய தினம் சித்து - அமரேந்திர சிங் இடையிலான கசப்புகள் குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் கேபினேட் அமைச்சர் சாது சிங் தர்மசோட் தெரிவிக்கையில்., முதல்வர் அமரேந்திர சிங் மீது சித்துவிற்கு நம்பிக்கை இல்லையென்றால் அவரது அமைச்சரவையில் இருந்து சித்து விலகிவிடலாம்., மாறாக அவர் தேவையில்லா அவதூறுகளை பரப்பி வருகின்றார் என விமர்சித்தார். மேலும் பாஜக கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய சித்து, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி எங்கு போய் சேருவார்? எனவும் கேள்வி எழுப்பினார்.


இதற்கு முன்னதாக கடந்த மே 19-ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெறுகையில், தனது வாக்கினை பதிவு செய்த பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் தெரிவிக்கையில்., பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக நவோஜத் சிங் விரும்புகின்றார். நான் இருக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் தேவையில்லா நேரங்களில் அர்த்தமற்ற கருத்துகளை வெளியிட்டு கட்சியின் பெயரை கெடுப்பதும் அவர் தான் எனவும் சித்துவை பகிரங்கமாக விமர்சித்தார்.


சில தினங்களுக்கு முன்னதாக சண்டிகர் தொகுதியில் தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததற்கு காரணம் பஞ்சாப் முதல்வர் தான் என சித்து குற்றம் சாட்டினார். பின்னர் பதித்திண்டா (அ) அமிர்தஸ்டர் தொகுதியில் சித்துவின் மனைவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது., எனினும் அவர் இந்த வாய்ப்பினை மறுத்துவிட்டார்.


இவ்விரு சம்பவங்களை தொடர்ந்து தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல்வர் அமரேந்திர சிங் அவர்களால் தான் என சித்து குற்றம் சாட்டினார். தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க போவது யார் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் இவ்வாறு நடக்கும் உள்பூசல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.