இரவில் அவசரமாக லண்டன் புறப்பட்ட ராகுல் காந்தி? தேர்தலுக்கு பிறகு இதுவே முதல்முறை!
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை அதிகாலை 1:50 மணிக்கு பிஏ-142 விமானம் மூலம் லண்டன் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேராக அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே காங்கிரஸ் கட்சிக்கு அவர்களின் பணிகளில் உதவி செய்யும் சாம் பிட்ரோடா என்ற நபர், ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் படிக்க | தெலங்கானாவில் தொடர் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து: தாய், மகள் பரிதாப பலி
மூன்று நாட்கள் அமெரிக்காவில் தங்கும் ராகுல் காந்தி?
முக்கிய நபர்களிடம் பேசி சில முடிவுகளை எடுக்க ராகுல் காந்தி மூன்று நாட்களுக்கு அமெரிக்கா செல்கிறார் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் அங்கு இருக்கும்போது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், வணிக உரிமையாளர்கள், உள்ளூர் தலைவர்கள் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சாம் பிட்ரோடா என்ற நபர் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து அனைவருக்கும் கூறும் வீடியோவை சனிக்கிழமை பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதி டல்லாஸிலும், செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வாஷிங்டனிலும் ராகுல் காந்தி இருப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் பயணம்
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்கிறார். "அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், நிருபர்கள் உட்பட பலர் ராகுல் காந்தியுடன் பேச விரும்புகின்றனர். ராகுல் காந்தி அவரது இந்த பயணத்தில் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திக்கிறார். மேலும் உள்ளூர் இந்திய வம்சாவளி மற்றும் சில தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச உள்ளார். பின்னர், டல்லாஸில் உள்ள முக்கிய தலைவர்களுடன் இரவு உணவில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கு மறுநாள் வாஷிங்டன் டிசிக்கு சென்று பலரைச் சந்திப்பார்" என்று பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ