புதுடெல்லி: இன்று சர்வதேச யோகா தினம். உலகம் முழுவதும் 5_வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு 5வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்ச்சிகளை செய்தார். அதுபோல உலகம் முழுவதும் பல இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது தனது சமூக வலைதளத்தில் "இராணுவ வீரர்கள் நாய்களுடன் யோகா செய்யும் படத்தைப் பகிர்ந்து "புதிய இந்தியா" என பதிவிட்டுள்ளார். 


 



இதனையடுத்து சமூக வலைதளங்களில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.