இதுதான் கடைசி ஊரடங்கு உத்தரவா அல்லது இன்னும் இருக்கா..? காங்கிரஸ் கேள்வி
நாட்டில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது எப்போ வரை தொடரும்? இதுதான் கடைசி ஊரடங்கு உத்தரவா அல்லது இன்னும் இருக்கா..? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
புது தில்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தை மே 17 வரை நீட்டித்த பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இந்த ஊரடங்கில் இருந்து வெளியேற மத்திய அரசாங்கம் என்ன திட்டமிட்டுள்ளது. அது எப்போது முழுமையாக முடிவடையும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளத்கு. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்புவதை குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பணம் வாங்காமல் வீட்டிற்கு அனுப்ப ரயில்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) மற்றும் சம்பளம் பெறும் வர்க்கங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஊரடங்கு எப்போது முடிவடையும்?
மே 17 ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக ஊரடங்கு காலத்தை நீட்டிப்பதாக, வெள்ளிக்கிழமை மாலை உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்து. வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய சுர்ஜேவாலா கூறியது, ஊரடங்கு குறித்து மக்களிடம் கூற, பிரதமர் மகக்ளிடம் உரையாற்றவில்லை, உள்துறை அமைச்சரும் வரவில்லை, எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை. உத்தியோகபூர்வ உத்தரவு மட்டுமே வந்தது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு பின்னணியில் உள்ள குறிக்கோள் மற்றும் மூலோபாயம் என்ன, முன்னோக்கி செல்லும் பாதை என்ன என்று சுர்ஜேவாலா கேட்டார். லாக் டவுன் -3 தான் கடைசியா மற்றும் மே 17 அன்று ஊரடங்கு முடிவடையும்? அல்லது லாக் டவுன் -4 மற்றும் லாக் டவுன் -5 ஆகியவையும் தொடர்ந்து பின் வருமா? அது எப்போது முழுமையாக முடிவடையும்? போன்ற கேள்விகளை மத்திய அரசிடம் எழுப்பினார்.
மே 17 க்குள் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதன் குறிக்கோள் என்ன என்று அவர் கேட்டார். மே 17 க்குள் மாற்றம், வாழ்வாதார பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மோடி அரசு என்ன இலக்குகளை நிர்ணயித்துள்ளது? அந்த இலக்குகளை அடைய மே 17 க்குள் என்ன அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக வைத்தார்.