இனி பெட்ரோல் விலை தினசரி உயரும்...ராகுல் காந்தி விமர்சனம்
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ள நிலையில் இனி மீண்டும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றத்தைக் காணலாம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 110 ரூபாயையையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த வரிக்குறைப்புக்கு முன்னதாக தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85 காசுகளுக்கும், டீசல் விலை ரூ.100.94 காசுகளுக்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனையானது.
இந்த வரிக்குறைப்பு குறித்து விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல், டீசல் வரியில் மாநில அரசுகளுக்கு குறைந்த பங்கீடே கிடைப்பதாகவும், பல மாநிலங்களின் வருவாய் பெட்ரோல், டீசல் மீதான வரியை நம்பியே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் நிதி வழங்கப்படாத நிலையில் மாநிலங்களால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியுமா என்பது தெரியவில்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு!
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த மார்ச் மாதம் ரூ.95-க்கு விற்பனையான பெட்ரோல் விலை மே மாதத்தில் ரூ.105-ஆக உயர்த்தப்பட்டு தற்போது வரியைக் குறைத்து ரூ.96-ல் நிறுத்தப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். இனி தினமும் பெட்ரோல், டீசல் விலையில் 30 பைசா, 80 பைசா என உயர்வை எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு மத்திய அரசு பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR2