ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பெயர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலினை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

200 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறகிறது. இத்தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக-வும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இரு கட்சிகளிலும் மூத்த தலைவர்கள் புறக்கனிக்கப்படுகின்றனர் என கட்சியை விட்டு மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரும் தேர்தலில் இம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பெயர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டுள்ளது.


முன்னதாக கடந்த 15-ஆம் நாள் 152 வேட்பாளர் பெயர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலையும், நேற்றைய தினம் 32 வேட்பாளர்களின் பெயர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். 



முன்னதாக வெளியிடப்பட்ட முதற் கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹரீஷ் மீனாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ராஜஸ்தான் | 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில்


  • வேட்புமனு தாக்கல் (இறுதி நாள்) - நவம்பர் 19, 2018

  • வேட்புமனு திருப்பபெற (இறுதி நாள்) - நவம்பர் 22, 2018

  • வாக்குப்பதிவு - டிசம்பர் 7, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018