டேவிந்தர் சிங், டேவிந்தர் கான்-ஆக இருந்திருந்தால் -காங்., கேள்வி!
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி டேவிந்தர் சிங் ஒரு முஸ்லீமாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்!
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி டேவிந்தர் சிங் ஒரு முஸ்லீமாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்!
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள தொடர்ச்சியான ட்வீட்டுகளில், ஆதீர் ரஞ்சன், "நாட்டின் எதிரிகள்" சமூக பின்னணியைப் பொருட்படுத்தாமல் விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
"முன்னதாக டேவிந்தர் சிங், டேவிந்தர் கான்-ஆக இருந்திருந்தால், RSS-ன் பூதம் படைப்பிரிவின் எதிர்வினை மிகவும் கடுமையானதாகவும், சத்தமாகவும் இருந்திருக்கும். நிறம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நம் நாட்டின் எதிரிகள் கண்டிக்கப்பட வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டடுள்ளார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி டேவிந்தர் சிங் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சனியன்று கைது செய்யப்பட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு மூன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட உடனேயே டேவிந்தர் சிங் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் போது ஒரு AK துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அலங்கரிக்கப்பட்ட அதிகாரியான டேவிந்தர் சிங், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சிக்கியபோது ஹார்ட்கோர் பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு வெளியே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரியுடன் கைப்பற்றப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் ஸ்ரீநகரின் பதாமி பாக் கன்டோன்மென்ட்டில் பெரிதும் பாதுகாக்கப்பட்ட அவரது வீட்டில் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியனில் இருந்து பயங்கரவாதிகளை வெள்ளியன்று டேவிந்தர் சிங் அழைத்துச் சென்று அவர்களை ஒரே இரவில் தங்க வைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரை விட்டு வெளியேறிய உயர்மட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி நவீத் பாபு மற்றும் அவரது இரு கூட்டாளிகளான இர்பான் மற்றும் ரஃபி ஆகியோர் இராணுவத்தின் 15 கார்ப்ஸ் தலைமையகத்திற்கு அடுத்த வீட்டிலேயே இரவைக் கழித்தனர் என்றும் கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் சனிக்கிழமை காலை ஜம்முவுக்கு புறப்பட்டனர் எனவும், அங்கிருந்து அவர்கள் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர் எனவும் கூறப்படுகிறது.
சிங் ஒரு பயங்கரவாதியைப் போலவே நடத்தப்படுகிறார் என்றும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் சிங்கின் டெல்லி வருகை குடியரசு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, என்ற கோணத்திலும் நடத்தப்படுவதாக தெரிகிறது.
காவல்துறை விசாரிப்புக்கு மத்தியில் தற்போது காங்கிரஸ் தலைவரின் கருத்து வெளியாகியுள்ளது.