கொரோனா முழு அடைப்பின் மூன்றாம் கட்டம் இன்றோடு முடிவடைகிறது, எனினும் நாட்டின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்து மத்திய அரசு கவலை கொண்டதாக தெரியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கருத்தினை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை குறித்து நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 


நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக முழு அடைப்பு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில்., பெரும்பாலான தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கின்றனர். குடியேறியவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் செய்யப்பட்டு வருகின்றன, எனினும் இன்னும் பலர் தங்கள் சொந்த வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பினை இதுவரையில் பெறவில்லை. அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக இந்த காலக்கட்டத்தில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு நடை பயணம் மேற்கொண்டு வருகின்றன, மேலும் இந்த விபரீத முயற்சில் பலர் தங்கள் உயிரை எதிர்பாரா விபத்துகளுக்கு பலிகொடுத்து வருகின்றனர்.


READ | கொரோனா எதிரொலி... விவசாயத்தில் கவனம் செலுத்த மோடி அரசு திட்டம்...


இந்த நிலைமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ட்விட்டர் பதிவிடுகையில்., "2 மில்லியன் புலம்பெயர்தோர் வெளிமாநிலங்களில் சிக்கி தங்கள் வீடுகளுக்குச் செல்ல ஆசைப்படுகிறார்கள். அவர்களால் இனியும் காத்திருக்க முடியாது, அவர்களிடம் பணம் இல்லை. ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் பசியால் இறக்கின்றனர். விபத்துகளால் இறக்கின்றனர். இதற்கு நீதித்துறை எப்போது தனது கேள்விகளை எழுப்பும்" என குறிப்பிட்டுள்ளார்.


உத்தரபிரதேசத்தின் அவுரையா மற்றும் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த விபத்தில் தொழிலாளர்கள் மரணம் குறித்து கபில் சிபல் தனது கவலையை தெரிவித்துள்ளார். சமீபத்தில், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகே ரயில் பாதையில் தூங்கிக்கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது ரயில் சென்றது, இதில் இந்த 16 தொழிலாளர்களும் இறந்தனர். சனிக்கிழமை, உத்தரப்பிரதேசத்தின் அவுராயாவில் உள்ள ட்ரோலாவிலிருந்து 26 தொழிலாளர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.