'நியாய்' திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜனவரி மாதம் துவங்கி பீகார் மாநிலத்தில் அதிக அளவு குழந்தைகள் மூளை காய்ச்சல் (என்செபாலிடிஸ் நோய்) நோய்க்கு பதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயின் காரணமாக உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


குறிப்பாக பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சல் காரணமாக இதுவரை 100 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.  ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள். 


குழந்தைகளை காப்பாற்ற மாநில அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பீகார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே சனிக்கிழமை தெரிவித்தார்.  இந்நிலையில் தற்போது 'நியாய்' திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "என்சிபாலிடிஸ் (மூளை காய்ச்சல்) நோயில் இறந்த குழந்தைகள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இந்தக் குடும்பங்களின் மாத வருமானம் சராசரி ரூ 5700. இவர்களில் 80% நாள் கூலி தொழிலாளர்கள். குடிசை வீடு.



பாதிக்கப்பட்ட குழந்தைகள் காய்ச்சலுக்கு முந்திய இரவு பட்டினியோடு உறங்கினார்கள். இந்தக் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய காரணம் வறுமை, பட்டினி.


'நியாய்' திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.