கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உட்பட 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல் கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் ராஜினாமா செய்வதற்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம் எல் ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம் எல் ஏக்கள் என ராஜினாமா கடிதம் அளித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தவிர இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஏற்கனவே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.


இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கோவாவில் பாஜகவின் பலம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதை தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாஜக செயல்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.