சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மெர்சிடஸ் பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரே வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்தது. ஜிஎஸ்டி வெற்றியென பா.ஜனதா தரப்பில் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. மறுபுறம் காங்கிரஸ் ஜிஎஸ்டி சாதாரண மக்கள் மீதான வரி சுமையை உயர்த்தியுள்ளது என விமர்சனம் செய்துள்ளது. 


நிலையில் பிரதமர் மோடி, ஸ்வராஜ்யா இதழுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது,  ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இந்த ஓர் ஆண்டில் மறைமுக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 17 வரிகள்  மற்றும் 23 கூடுதல் வரிகள் என அனைத்தும் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில், மாநில அரசுகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு ஜிஎஸ்டி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.


ஜிஎஸ்டி அமைப்பில்  ஒரே வரி விகிதத்தை கொண்டு வருவது மிக எளிது. ஆனால் மெர்சிடஸ் பென்ஸ் காருக்கும் உணவுப் பொருட்களுக்கும் ஒரே வரி விகிதம் நிர்ணயிக்க முடியுமா?. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஒரே வரி விகிதத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்கின்றனர்.


ஆனால் தற்போது 0 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை வரி விகிதத்தில் உள்ள உணவுப் பொருட்களுக்கும் மற்ற கமாடிட்டி பொருட்களுக்கும் 18 சதவீத சதவீதத்தை நிர்ணயிக்க முடியுமா? என்பதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மொத்தம் 66 லட்சம் பேர் மறைமுக வரியின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு புதிதாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 48 லட்சம் பேர். மொத்தம் 11 கோடி வரித்தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.