நியூடெல்லி: ஆதிர் சவுத்ரியை இடைநீக்கம் செய்வது குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition (LoP)) சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து ஆலோசிக்க சிபிபி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்தது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி, மக்களவை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இன்று (2023, ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை) கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் (எல்ஓபி) சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து விவாதிக்க இன்று காலை 10.30 மணிக்கு சிபிபி தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் லோக்சபா எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பேசும்போதோ அல்லது விவாதம் நடக்கும்போதோ அவர் சபைக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, வியாழக்கிழமை மாலை மக்களவையில் சவுத்ரியின் இடைநீக்கத் தீர்மானத்தை முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் படிக்க | ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்தாரா? ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு: வீடியோ ஆதாரம்


நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது பிரதமர் மீது சவுத்ரி கூறிய சில கருத்துக்கள் கருவூல பெஞ்சுகளில் இருந்து சீற்றத்தைத் தூண்டியதை அடுத்து தீர்மானம் முன்வைக்கப்பட்டது.


சிறப்புரிமைக் குழுவின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'நிரவ்' என்றால் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியை அவமதிப்பது அவரது நோக்கம் அல்ல என்றும் கூறினார். 


"நான் பிரதமர் மோடியை அவமதிக்கவில்லை. மோடி ஜி எல்லா விஷயங்களிலும் பேசுகிறார், ஆனால் அவர் மணிப்பூர் விவகாரத்தில் மட்டும் 'நிரவ்', அதாவது அமைதியாக அமர்ந்திருக்கிறார், 'நிரவ்' என்றால் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே பொருள். என் நோக்கம் பிரதமர் மோடியை அவமதிப்பது அல்ல. நான் பயன்படுத்திய வார்த்தைகளால் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்டதாக உணரவில்லை, அவரது அமைச்சர்கள் அவ்வாறு தவறாக வார்த்தையை திரித்து எனக்கு எதிராக சஸ்பெண்ட் என்ற விவகாரத்தை முனேடுத்து, அது சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, நான் இடைநீக்கம் செய்யப்பட்டதை அறிந்தேன்" என்று சவுத்ரி கூறினார்.


மேலும் படிக்க | ’டார்கெட் திமுக’ நிர்மலா சீதாராமன் முதல் ஸ்மிருதி இரானி வரை - அனல் பறக்கும் நாடாளுமன்றம்


பிரதமர் மோடி அவர்கள், நாள்தோறும் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியை அவமதிப்பதாகவும், அது பதிவாகி வருவதை சுட்டிக்காட்டிய அதிர் ரஞ்சன் சவுத்ரி, "பிரதமர் மோடி நூறு முறை பிரதமரானாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை," என்று அவர் கூறினார்.


"நான் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன், ஆனால் எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளன, பிரதமர் மோடியை அவமதிக்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்பதை நாட்டின் குடிமக்கள் அறிந்து கொள்வார்கள்" என்று கூறிய ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மேலும் கூறுகையில், "கடந்த மூன்று நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தபோது, மக்களவையில் பிரதமர் உரையாற்றினார். எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றார், ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயத்தை அவர் கவனிக்கவேவில்லை. நான் பிரதமருடன் விவாதித்தேன். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக நாங்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வருமாறு வற்புறுத்த வேண்டியிருந்தது என்பது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். 


தான் இரண்டு விஷயங்களைச் சொன்னதாகவும், அவை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அது தனது தவறல்ல என்றும் சவுத்ரி உறுதிபட கூறினார். "நான் ஒரு உருவகமாக உதாரணத்தைக் கொடுத்தேன், பிரதமரை அவமதிக்கும் எண்ணம் இல்லை. நான் சொன்ன இரண்டாவது விஷயம், பிரதமர் எல்லாவற்றையும் பேசுகிறாரே, மணிப்பூர் விவகாரத்தில் மட்டும் 'நிரவ்' என்ற அமைதி நிலையை கடைபிடிப்பதாகக் கூறினேன்” என்று சவுத்ரி கூறினார்.


மேலும் படிக்க | எதிர்கட்சிகளுக்கு எல்லா விஷயமும் அரசியல் மட்டுமே. அவர்களுக்கு இருப்பது அதிகாரப் பசி மட்டுமே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ