ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராக மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கோர்ட் அவமதிப்பு மற்றும் வங்கிக் கடன் மோசடி வழக்கில், தொழில் அதிபர் விஜய் மல்லையா ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து மோசடி வழக்கில் ஆஜராகுமாறு, விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகத் தவறியதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மல்லையா கோர்ட்டை அவமதித்துள்ளதாக கூறியுள்ளதுடன், ஜூலை 10-ம் தேதி அவர்நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் லண்டனுக்கு சென்றுள்ளனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.