தொடர் ஏ.டி.எம் கொள்ளையில் சிக்கிய ஜம்மு!
ஜம்முவில் அதிகரித்து வரும் ஏ.டி.எம் திருட்டு.
ஜம்மு காஷ்மீரின் பிஜ்ஹேபராவில் உள்ள பகுதியில் மீண்டும் ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
ANI தகவல்களின்படி, பிஜ்ஹேபராவில் பகுதியில் உள்ளஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ATM இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது.
ATM-ல் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ATM வாயில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது, எனவே கொள்ளையர்கள் இதன் வழியாகவே சென்று கொள்ளையடித்திருக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர் என தெரிவித்தனர்.
எனினும் மக்களின் அச்சம் நீங்கவில்லை, காரணம் இச்சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக நடைப்பெரும் மூன்றாவது ஏடிஎம் கொள்ளை சம்பவம் ஆகும்.