சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்து உள்ளார். படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 1 க்கு முன்னதாக வெளியிடப்பட்டது, தற்போது திரைப்படத் தயாரிப்பாளர்கள்  தணிக்கைச் சான்றிதழை இன்னும் பெறவில்லை என்பதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் எனவும் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் எனவும்  கடந்த ஒரு வாரமாக போராட்டக்காரர்கள் அறிவித்தது கொண்டே இருந்தனர்.


அதன் பின்பு நேற்று திடீர்ரென நாகர்கர் கோட்டையில் அடையலாம் தெரியாத நபரின் உடல் தொங்கியது. தொங்கிய உடலின் பக்கத்தில் உள்ள பாறைகள் மீது நான் முன்பே பத்மாவதியை பார்த்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 இந்நிலையில், தற்போது பத்மாவதி’ படத்தினை தடை செய்ய கோரி குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸார்  தடியடி குடுத்து போராட்டத்தை களைத்தனர். 


#Rajasthan: Police baton charged members of Karni Sena while they were taking out protest rallies against #Padmavati film in Bhilwara, markets shut at various places. pic.twitter.com/BeTwMlH0T8