அடுத்த மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, அந்தமாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் பிரச்சாரம் மேற்க்கொண்டார். காலையில் அந்த பகுதிக்கு வந்தவுடன், முதலில் அங்கு உள்ள மஹாகாளேஸ்வர் கோவிலுக்குச் சென்றார். அவர் வழிபாட்டில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பூணூல் அணிந்திருந்தார். இது அதுக்குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. 


மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக செய்தித் தொடர்பாளார் சம்பிட் பத்ரா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பூணூல் அணிந்திருகிறார். இது எந்தவகை பூணூல், ராகுல் காந்தி என்ன கோத்திரம் என்பதைக் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் கூறினார்.


தற்போது பாஜக செய்தித் தொடர்பாளார் சம்பிட் பத்ராவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.


முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.