கொரோனா தொற்று..!! மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ரயில் இருந்து கீழே இறக்கப்பட்ட 4 பயணிகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பயணிகள் மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்ட கீழே இறக்கப்பட்டனர்.
மும்பை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இதுவரை 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இன்று நடந்த ஒரு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா குறித்த அச்சம் எந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது என்பதற்கான ஒரு சம்பவம் தான் இது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பயணிகள் மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்ட மற்ற பயணிகள், மகாராஷ்டிராவின் பால்கர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி நான்கு பயணிகளையும் கீழே இறக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயணிகள் மும்பையில் இருந்து சூரத்துக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் கையில் கொரோனா தொற்று காரணமாக, தனிமைபடுத்தும் ஒரு முத்திரை இருந்துள்ளது.
அங்கு வந்த சுகாதாரத் துறை குழு அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் பிறகு, ஒரு தனியார் வாகனம் மூலம் அவர்களை அவர்கள் சொந்த இடத்திற்கு அனுப்புவது பரிசீலிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பை தடுக்க மகாராஷ்டிரா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மும்பை பெருநகர நகராட்சியும் (பி.எம்.சி - BMC) மக்களிடையே விழிப்புணர்வை பரப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. திறந்த சாலைகள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புவர்களுக்கு பி.எம்.சி அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாகும். இது இருமல், தும்மல், நோயாளியை எச்சில் துப்புவது போன்றக் காரணங்களால் பரவுகிறது. முன்னெச்சரிக்கையாக, பொது இடங்களில் எச்சில் துப்புவர்களுக்கு பி.எம்.சி ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறது. இந்த நடவடிக்கையால் கொரோனா மட்டுமல்ல, பிற நோய்களும் பரவாமல் தடுக்கலாம்.