உலக அளவில் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மேல் நோக்கி வந்து கொண்டிருப்பது வருத்ததைத் தந்தாலும், இறப்பு விகிதம் நம் நாட்டில் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில், கொரோனா (Corona) தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய சுகாதாரத் துறை (Central Health Department) சிறப்பு முதன்மை அதிகாரி ராஜேஷ் பூஷண், “ஜூலை 17ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 3.36லிருந்து 2.43ஆகக் குறைந்துள்ளது. இந்த தரவுகள், நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதை தெரிவிக்கின்றன” என்று கூறினார்.


கொரோனா நிலவரம் தொடர்பாக ராஜேஷ் பூஷண் (Rajesh Bhushan) ஊடக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நாட்டில் கொரோனா தொற்றை 5 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வேண்டும் என இலக்கு வைத்து பணிகளைச் செய்து வருகிறோம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டில் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாக உள்ளன” என்று தெரிவித்தார்.


ALSO READ: Corona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்!!


நாட்டில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் 20. 4 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். அதுவே உலகளவில் இந்த இறப்பு விகிதம் 21 முதல் 33 மடங்கு வரை உள்ளது. ஜூலை 17ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 3. 36லிருந்து 2. 43ஆகக் குறைந்துவிட்டது.


கொரோனா பரிசோதனைகளைப் பற்றி பார்க்கையில், சராசரியாக நாட்டில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் நோய் பாதிப்பு சதவிகிதம் 5 சதவிகிதமாகக் குறைந்து விடும் என நம்பப்படுகிறது.


கொரோனா வைரஸ் தொற்றை இந்தியா மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. வல்லுநர்களின் வழிக்காட்டுதல்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.