உலகை கொரோனா தொற்று கடுமையான வகையில் பாதித்துள்ளது. தொற்று தாக்காமல் இருக்க மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோ அதிலிருந்து பாதுகாப்பாக மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொரோனாவை விட கொடியவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அவ்வப்போது நாம் கேள்விப்படும் சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரசிலிருந்து மீண்டு வர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒரு பெண், திங்களன்று ஒரு மருத்துவரால் பாலியல் துபுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் உத்திர பிரதேசத்தின் நோய்டாவில் (Noida) உள்ள ஜெய்பீ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.


அந்த பெண் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஆவார். தனது புகாரில் 35 வயது மருத்துவர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரும் ஒரு கோவிட் -19 நோயாளி என்பதும், அந்தப் பெண் சேர்க்கப்பட்ட அதே தனிமை வார்டில் அவரும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.


பெண்ணின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 வது பிரிவின் கீழ் (IPC 354) எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் மருத்துவர் மீது நொய்டா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ALSO READ: Delhi: கொரோனா நோயாளிகள் குறைவு, 24 மணி நேரத்தில் 613 புதிய நோயாளிகள் பதிவு


அம்ரித் கோயல் என்ற அந்த மருத்துவர் ஜூலை 23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோயலும் ஒரு Covid -19 நோயாளி என்பதால், இதுவரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அவர் முழுவதுமாக குணமடைந்து சோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


காவல்துறையினர், பெண் அளித்துள்ள புகார் குறித்து மருத்துவமனையிடம் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளது.


ALSO READ: JULY 28: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்


இதே போன்ற வழக்குகள் சில நாட்களுக்கு முன்பு அலிகார் மற்றும் டெல்லியிலிருந்தும் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.