Corona Second Wave: ஆயுதப்படைகளுக்கு அவசர கால அதிகாரம்
அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இராணுவம் மற்றும் தொடர்புடைய துறைகள் எந்தவொரு தேவையான பணிக்கும் நிதி ஒதுக்குவதற்கான முடிவையும் எடுக்கலாம்
புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Corona Virus)தொற்றுநோயுடனான போரில், கொரோனா பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள மக்களூம், நிறுவனங்களும், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, கொரோனாவினால பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். நாட்டின் இராணுவமும் மக்களை பாதுகாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) ஆயுதப்படைகளுக்கு அவசர நிதிக்கான அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இராணுவம் மற்றும் தொடர்புடைய துறைகள் எந்தவொரு தேவையான பணிக்கும் நிதி ஒதுக்குவதற்கான முடிவையும் எடுக்கலாம். அதோடு கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்களை வாங்குவதுடன், கொரோனாவிற்கான சிகிச்சை மையங்களையும் இயக்கலாம்
ஆயுதப்படைகளுக்கு இந்த அவசரகால அதிகாரங்கள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவை மே 1 முதல் ஜூலை 31 வரை அமலில் இருக்கும். முன்னதாக, நிலைமையைக் கட்டுப்படுத்த, கடந்த வாரம் மத்திய ஆயுதப்படைகளின் மருத்துவ அதிகாரிகளுக்கும் அவசரகால அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), 'ஆயுதப்படைகளுக்கு அவசர நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதப்படை தனது முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளும் என்றார்.
ALSO READ | Sputnik-V தடுப்பூசி: மே மாதத்திலிருந்து பயன்பாட்டிற்கு வருகிறதா; உண்மை நிலை என்ன
நாட்டில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது எடுக்கப்பட்ட இந்த முடிவு நிலைமையை மேம்படுத்த உதவும். தொற்றுநோயின் தொடக்கத்தில், கடந்த ஆண்டு இதே போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரகால பொருளாதார அதிகாரங்களைப் பெற்ற பிறகு, இப்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இராணுவத்தால் மேற்கொள்ள முடியும்.
ALSO READ | உங்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள்: பிரதமர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்