21 நாள் முழு முடக்கத்தின் போது சரியாக செயல்படாத 2 டெல்லி அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கின் போது சரியாக செயல்படாத காரணத்திற்காக மேலும் இரு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.


நிதி முதன்மைச் செயலாளரும் GNCTD மற்றும் பிரதேச ஆணையாளரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர. இந்நிலையில்,  போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளரும் உள்துறை மற்றும் நில கட்டிடத் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


“கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005’-ன் கீழ் அமைக்கப்பட்ட தேசிய செயற்குழுத் தலைவர் தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு கண்டிப்பாக இணங்குவதை உறுதிசெய்யும் பொறுப்புள்ள பின்வரும் அதிகாரிகள் தகுதிவாய்ந்த அதிகாரத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், இந்த அதிகாரிகள் தங்கள் பணியை செய்ய தவறிவிட்டனர்” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


“இந்த அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கின் போது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறவிட்டனர். அவர்களின் கடமைகளின் செயல்பாட்டில் ஏற்பட்ட கடுமையான குறைபாடு காரணமாக, தகுதிவாய்ந்த அதிகாரசபை பின்வரும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடமையை சரியாக செய்யாத குற்றத்திற்காக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசு இந்த ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.