கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்
கொரோனா 3வது அலை பாதிப்பானது அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. எனினும் உலகெங்கிலும் பல இடங்களில் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வருகின்றன.
இதற்கிடையில் கொரோனா (Coronavirus) பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் கொரோனா மூன்றாவது அலை (Corona Third Wave) பாதிப்பு குறித்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை பணிக்கு ₹100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்
அதன்படி, 3வது அலை பாதிப்பில் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் இருந்த போது இத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மூன்றாவது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது வரவிருக்கும் கொரோனா 3வது அலை பாதிப்பானது அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாகவும், இந்த மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Corona Third Wave: 8 வாரங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR