சீனாவின் வுஹானிலிருக்கும் இந்தியர்களை அழைத்து வர டெல்லியிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு விமானம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: சீனாவில் வசிக்கும் இந்திய குடிமகனை பாதுகாப்பாக அழைத்துவர ஏர் இந்தியா விமானம் புதுடில்லியில் இருந்து வுஹானுக்கு இன்று மதியம் புறப்பட உள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் என்று வெளிவிவகார மற்றும் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் பீதியால் சீனாவின் ஊகான் நகரம் இயல்புநிலை குலைந்து போயிருக்கும் நிலையில், அங்கு படிக்கும் 325 மாணவர்களை முதற்கட்டமாக இன்று இந்தியா அழைத்து வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளளது. ஏர் இந்தியா, இன்டிகோ போன்ற விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவுக்கு விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர சீன அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஊகான் நகரில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் பல்வேறு நாட்டவர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.



முதற்கட்டமாக இந்தியாவுக்கும் இன்று 250 மாணவர்கள் ஊகானிலிருந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்து கவனிக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.


சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இந்திய குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்கு இரண்டு விமானங்களை இயக்க சீன அரசு அனுமதி கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் ஜனவரி 29 அன்று தெரிவித்தது. இது தொடர்பாக சீன அரசாங்கத்துடன் MEA தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தது. சீனா தொடர்ந்து சர்வதேச சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பொது சுகாதார பாதுகாப்பைப் பாதுகாக்க மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைக்கிறது.



கொரோனா வைரஸ் வெடித்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது என்று சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 204 இறப்புகள் உட்பட 5,806 உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கபட்டவர்கள் பதிவாகியுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 9,692 ஆகும்.