ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 60,868  பேர் குணமடைந்துள்ளனர்; 971 பேர் உயிரிழந்துள்ளனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 78,512 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளையும், சுமார் 971 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டியது, மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மொத்த பாதிப்புகள் 36,21,246 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 64,469 ஆகவும் காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவு காட்டுகிறது. இவர்களில் 27,74,802 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை 25.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் 845,000-க்கும் அதிகமாகிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,133,368 ஆகவும், இறப்புகள் 845,073 ஆகவும் உயர்ந்துள்ளன என்று பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (CSSE) தனது சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.


S. No. Name of State / UT Active Cases* Cured/Discharged/Migrated* Deaths**
Total Change since yesterday Cumulative Change since yesterday Cumulative Change since yesterday
1 Andaman and Nicobar Islands 518 46  2519 75  44
2 Andhra Pradesh 97681 1490  312687 8976  3796 82 
3 Arunachal Pradesh 1118 87  2754 45  5  
4 Assam 20995 984  82510 1440  289
5 Bihar 17670 377  114772 2320  561
6 Chandigarh 1692 120  2248 141  45  
7 Chhattisgarh 12666 793  15818 709  262 11 
8 Dadra and Nagar Haveli and Daman and Diu 306 22  1998 38  2  
9 Delhi 14040 490  152922 1449  4404 15 
10 Goa 3646 111  12729 433  178
11 Gujarat 15109 158  75636 1111  2989 13 
12 Haryana 10606 381  50711 1001  670
13 Himachal Pradesh 1439 16  4308 159  34
14 Jammu and Kashmir 7672 109  28020 648  685
15 Jharkhand 11357 267  25103 1253  397 16 
16 Karnataka 86465 99  235128 8110  5483 115 
17 Kerala 23342 166  48079 2225  280
18 Ladakh 826 28  1745 31  32
19 Madhya Pradesh 13117 403  46413 1017  1345 22 
20 Maharashtra 185467 4417  554711 11541  24103 328 
21 Manipur 1746 13  4186 129  28
22 Meghalaya 1238 34  1035 77  10  
23 Mizoram 424 70  584 75  0  
24 Nagaland 925 21  2917 67  9  
25 Odisha 26736 350  70714 2888  470 14 
26 Puducherry 4834 89  8511 431  211 12 
27 Punjab 15409 346  34091 1083  1348 41 
28 Rajasthan 14776 456  62971 938  1030 13 
29 Sikkim 404 15  1195 11  3  
30 Tamil Nadu 52726 220  355727 6045  7137 87 
31 Telengana 31284 1276  90988 1638  818 10 
32 Tripura 3977 251  7232 195  98
33 Uttarakhand 5735 233  12586 462  250 11 
34 Uttar Pradesh 53360 709  162741 4862  3356 62 
35 West Bengal 25996 353  127644 3312  3126 53 
Total# 765302 12878  2713933 64935  63498 948

உலகளாவிய பாதிப்புகளைப் பொறுத்தவரை, இந்தியா மூன்றாவது இடத்தில் (3,542,733), ரஷ்யா (987,470), பெரு (639,435), தென்னாப்பிரிக்கா (625,056), மெக்சிகோ (595,841), கொலம்பியா (599,884), ஸ்பெயின் (439,286), சிலி (409,974) ), அர்ஜென்டினா (408,426), ஈரான் (373,570), இங்கிலாந்து (336,668), பிரான்ஸ் (315,813), சவுதி அரேபியா (314,821), பங்களாதேஷ் (310,822), பாகிஸ்தான் (295,636), துருக்கி (268,546), இத்தாலி (268,218), ஜெர்மனி (243,305), ஈராக் (231,177), பிலிப்பைன்ஸ் (217,396), இந்தோனேசியா (172,053), கனடா (129,88) , உக்ரைன் (121,930), கத்தார் (118,575), பொலிவியா (115,354), இஸ்ரேல் (114,020), ஈக்வடார் (113,648) மற்றும் கஜகஸ்தான் (105,684) என CSSE புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.