இந்தியா: நாட்டில் COVID-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,008 ஆக உயர்ந்துள்ளது மற்றும் புதன்கிழமை நாட்டில் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,787 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 71 இறப்புகள் பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை மாலை வரை 1,813 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளன.


அதேபோல செயலில் உள்ள COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 22,982 ஆகவும், இதுவரை 7,796 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒரு நோயாளி இடம் பெயர்ந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை 1013 ஆக உள்ளது என பி.டி.ஐ. [PTI] செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.


இதுவரை 24.52 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நாட்டில் மொத்த கொரோனா நோய் தொற்றுகளில் 111 பேர் வெளிநாட்டினர் உள்ளனர்.


இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மொத்தம் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 31 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், 19 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 6 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஐந்து பேர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் மற்றும் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் தமிழ் நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.


இதுவரை ஏற்பட்டுள்ள மொத்தம் 1,008 இறப்புகளில், மகாராஷ்டிரா 400 இறப்புக்களுடன் முதலிடத்திலும், குஜராத் 181, மத்தியப் பிரதேசம் 119, டெல்லி 54, ராஜஸ்தான் 51, உத்தரபிரதேசம் 36, ஆந்திரா 31 ஆகவும் உள்ளன.